படுப்படியாக குறைந்து வரும் கேப்டன் மில்லர் வசூல்! மூன்றாவது நாள் கலெக்‌ஷன்!

vinoth

திங்கள், 15 ஜனவரி 2024 (12:31 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு நாள் முடிவில் கேப்டன் மில்லர் 23 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கலவையான விமர்சனங்களை அடுத்து மூன்றாம் நாளான நேற்று ஞாயிற்றுக் கிழமையில் வசூல் பெருத்த சரிவை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மூன்றாம் நாளில் 7 கோடி ரூபாய் அளவுக்கே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்