தனுஷ், ஷான் ரோல்டனை ‘மெண்டல்’ எனக் குறிப்பிட்ட செளந்தர்யா

திங்கள், 10 ஜூலை 2017 (15:25 IST)
தனுஷ் மற்றும் ஷான் ரோல்டனை, ‘மெண்டல்’ எனக் கூறியுள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.



 
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியான இந்தப் படத்தில், தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 28ஆம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது. எனவே, படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கிறது படக்குழு.

இந்நிலையில், நேற்று ஃபைனல் ரெக்கார்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ட்விட்டரில் லைவ் வீடியோ போட்டுள்ளார் செளந்தர்யா. அந்த வீடியோவில், தனுஷ் மற்றும் ஷான் ரோல்டன் இருவரையும் ‘மெண்டல்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இது ஜாலிக்காக இருந்தாலும், தனுஷ் ரசிகர்களைக் கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்