ஒரே படத்தை இரண்டு பேரிடம் விற்ற தனுஷும் அவர் தந்தையும்!

புதன், 27 அக்டோபர் 2021 (10:38 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. இந்த படத்தை தனது தந்தை பெயரில் தனுஷே தயாரித்திருந்தார்.

தனுஷ் நடிப்பில் அவரது மனைவி சௌந்தர்யா தனுஷ் இயக்கி தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்த படம் 3. இந்த படம் ஒய் திஸ் கொலவெறி பாடலால் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அட்டர் ப்ளாப் ஆனது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி உரிமையை சில ஆண்டுகளுக்கு முன்பே தனுஷ் ஒருவரிடம் விற்றுள்ளார்.

ஆனால் இப்போது தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் வேறொரு இந்தி விநியோகஸ்தரிடம் விற்றுவிட்டாராம். இதனால் பிரச்சனை உருவாகியுள்ளதாம். விரைவில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடிக்க உள்ளார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்