தனுஷ் 50 படத்தில் இணைந்த பிரபுதேவா!

செவ்வாய், 31 அக்டோபர் 2023 (07:49 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ள தனுஷ் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றை சமீபத்தில் தனுஷ் படமாக்கியுள்ளார். படத்தில் நடிக்கும் பெரும்பாலான கலைஞர்கள் இந்த பாடலில் நடனமாடியுள்ளதாகவும், இந்த பாடலை பிரபுதேவா நடனம் அமைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்