மீண்டும் இசையமைப்பில் கவனம் செலுத்தும் தர்புகா சிவா!

திங்கள், 19 ஜூலை 2021 (16:12 IST)
கிடாரி படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் தர்புகா சிவா.

அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு இசையமைத்தார். அந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அவர் செலக்ட்டிவ்வாக படங்களை ஒப்பந்தம் செய்தார். இப்போது அவர் இசையமைப்பில் ராக்கி மற்றும் முதல் நீ முடிவும் நீ ஆகிய படங்கள் ரிலிஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் இசையமைக்க தயாராகவே உள்ளதாகவும் நல்ல கதைகள் இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்