இது தற்போது பரபரப்பான விவாதமாகி உள்ளது. இது குறித்து இளையராஜாவின் காப்பிரைட் ஆலோசகர் பிரதீப் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, பாடகர்கள் பல நிகழ்ச்சிகளில் பாடி வருவாயைக் குவிக்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளர்களுக்கு இதில் எந்த லாபமும் வருவதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், இளையராஜா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இனி மேடைகளில் தனது பாடல்களைப் பாட முறையான அனுமதி பெற வேண்டும், ராயல்டி தரவேண்டும் என்று தெளிவாக கூறினார்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் பாடல்கள், இசையை உருவாக்கிய ஒரு மேதைக்கு உரிய காப்புரிமைத் தொகையை தராமல் இதனை விமர்சனம் செய்வது தவறில்லையா, ஏழை ஆர்க்கெஸ்ட்ராக்களை தனது பாடல்களை பாட இலவசமாகவே அனுமதி கொடுத்துள்ளார்.