ஆனால் இன்று ரஜினிக்கு சச்சின் தெண்டுல்கர் அழைப்பு விடுத்துள்ளார். ரஜினி தனது வீட்டுக்கு வரவேண்டும் என்றும், தன்னுடைய திரைப்படமான 'சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்' படத்தை ரஜினி பார்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். ஏற்கனவே 'சச்சின்' படம் வெற்றி பெற ரஜினி டுவிட்டரில் வாழ்த்தியதும் அதற்கு சச்சின் நன்றி தெரிவித்ததும் அனைவரும் அறிந்ததே
சச்சின் வேண்டுகோளை ரஜினி ஏற்றுக்கொண்டதாகவும் மிக விரைவில் ரஜினி, சச்சின் வீட்டுக்கு செல்வார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இரண்டு துறைகளின் சூப்பர் ஸ்டார்கள் சந்திக்கும் அந்த நேரத்தை ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.