'மகளிர் மட்டும்' படத்திற்கு பாராட்டு தெரிவித்த பெண் எம்.எல்.ஏ

செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (05:35 IST)
சிபிஎம் கட்சியின் எம்.எல்.ஏ பாலபாரதி குறித்து அனைவரும் அறிந்ததே. ஆடம்பர, பகட்டு எம்.எல்.ஏக்களுக்கு மத்தியில் அமைதியாக இருந்தாலும், ஆணித்தரமான கருத்துக்களை முன்வைப்பவர். குறிப்பாக பெண்ணிய கருத்துக்களை வலிமையுடன் கூறுபவர்



 
 
இவர் சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் பிரம்மா இயக்கிய 'மகளிர் மட்டும்' படத்தை பார்த்துள்ளார். பொதுவாக சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத இவர், இந்த படம் பரவலாக பெண்ணிய கருத்துக்களை கூறிய படம் என்ற விமர்சனத்தால் பார்க்க விரும்பினாரா
 
படத்தை பார்த்து முடித்தவுடன் தனது டுவிட்டரில் அவர் கூறியபோது, 'யார் அந்த பிரம்மா..? மகளிர் மட்டும் மிக அருமை.. மிகவும் அருமை..! பாராட்டுகள்.. வாழ்த்துகள். பெண்கள் மகிழ்ச்சியோடு மகளிர் மட்டும் படத்தை திரையரங்கில் ரசித்தார்கள்… நானும் அவ்வாறே. பல ஆண்டுகள் பேசியும் யாருக்கும் புரியவில்லையே என நினைத்திருந்த பெண்ணிய கருத்தை மிகுந்த எதார்த்தத்தோடு சித்தரிந்தீர்கள்.. நல்ல கருத்தோடு நல்ல படம். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.” என்று டுவீட் செய்திருந்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்