நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்ததாக இந்து மத அமைப்பினர் குற்றம் சாட்டினர். மேலும், கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தியது.