கோகுல்ராஜ் கொலை வழக்கு; சாகும்வரை ஆயுள் தண்டனை! – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

செவ்வாய், 8 மார்ச் 2022 (16:01 IST)
சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது மதுரை சிறப்பு நீதிமன்றம்.

சேலம் பொறியியல் பட்டதாரி மாணவரான கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இன்று அவர்களுக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி கோகுல்ராஜ் கொலையில் முக்கிய குற்றவாளியான யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜின் டிரைவர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனைகளும், கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குமார், சதீஷ், ரஞ்சித், ரகு மற்றும் செல்வராஜூக்கு 2 ஆயுள் தண்டனைகளும், பிரபு மற்றும் கிரிதரனுக்கு ஆயுள் தண்டனையுடன் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்