சூப்பர் ஸ்டாரின் சகோதரருக்கு கொரொனா தொற்று உறுதி !

புதன், 16 செப்டம்பர் 2020 (20:29 IST)
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 


தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் நாகபாபு. இவரது மகன் பிரபல நடிகர் வருண் தேஜ். மகள் நிஹாரிகா. இருவரும் நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு  கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரொனா தொற்றிலிருந்து மீண்டு வந்து பிளாஸ்மா தானம் செய்யவுள்ளதாக பாசிட்டிவாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்