தொடரும் நடிகர்கள் மரணம் ….…திரையுலகினர் …ரசிகர்கள் அதிர்ச்சி

செவ்வாய், 11 மே 2021 (20:51 IST)
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் முக்கிய நடிகர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்த நிலையில் தற்போது,  மற்றோரு நடிகர் காலமானார்.

சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, சூர்யா பட இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். இதன்பின்பு நடிகரும், பன்முகக் கலைஞருமான பாண்டு சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் மீளுவதற்குள்ளாகவே இன்று மற்றொரு நடிகர் காலமானார்.
கார்த்தி – அனுஷ்கா நடிப்பில் வெளியான சகுனி, கருணாஷின் அம்பாசமுத்திரம் அம்பானி, கண்ணும் கண்ணும், கற்றது கள்வும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நெல்லை சிவா. இவர் பல சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களின் பிரபலமானார். அவர் பேசும் நெல்லை பேச்சு வழக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

கண்ணும் கண்ணும் படத்தில் நடிகர் வடிவேலு கிணத்தக் காணாம் என்று போலீஸாக இருக்கும் நெல்லை சிவாவிடம் கூறும் காமெடி பிரபலமானது.

இந்நிலையில். திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்துவந்த நெல்லை சிவா இன்று தனது சொந்த ஊரில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இவரது இறுதிச்சடங்கு நாளை நெல்லைமாவட்டத்தில் உள்ள பணகுடியில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகினருக்கு ஏற்படும் மன அழுத்தம்,அதிக வேலைப்பளு அல்லது போதிய உடல்நலக் கவனிப்பின்மையால் இந்த மாரடைப்பு ஏற்படுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்