விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஆனால் இப்போது இது சம்மந்தமாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. ஏனென்றால் இதே போன்ற கதாபாத்திரத்தில்தான் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரமும் பாக்யாவை திருமணம் செய்துகொண்டும், ராதிகாவைக் காதலித்துக் கொண்டும் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை வில்லனாக நடத்தும் சமூகம் கா. வா. கா. திரைப்படத்தின் விஜய் சேதுபதியை ஹீரோவாக அங்கீகரிப்பதா என ஜாலியாக சமூகவலைதளங்களில் ட்ரோல் மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றன.