சபாஷ் நாயுடு படத்திற்கு பல பிரச்சனைகள். இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என்று ஒவ்வொருவராக, வெவ்வேறு காரணங்களுக்காக விலகிவிட்டனர். இன்னும் ஒரு மாத கால ஓய்வுக்குப் பிறகுதான் சபாஷ் நாயுடு குறித்தே கமலால் யோசிக்க முடியும். படம் திட்டமிட்டதைவிட பல மாதங்கள் தள்ளிப் போகும்.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு, முடங்கிக் கிடக்கும் விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து வாங்கி வெளியிடும் முயற்சியில் கமல் இறங்கியுள்ளார். கடனில் மூழ்கியிருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் அது கை கொடுத்தது போலிருக்கும்.