நானும் ரௌடிதான் படத்தில், ரௌடியாகும் முயற்சியில் இறங்கிய விஜய் சேதுபதி, தற்போது விரைப்பு போலீஸாக அவதாரம் எடுத்திருக்கிறார். இது, சேதுபதி படத்திற்காக.
நானும் ரௌடிதான் படத்துக்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த ஆறு படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்தன. அந்த ஆறு தோல்விகளில் ஒன்றை மட்டும் விஜய் சேதுபதி தோல்வியாக கருதவில்லை. அது, பண்ணையாரும் பத்மினியும் படம். அது நல்ல படம் என்ற எண்ணம் அப்போதும், இப்போதும் விஜய் சேதுபதிக்கு உண்டு.