நேரில் வந்து அடித்து , உதைப்பேன் - மன்சூர் அலிகான் ஆவேசம் ...யார் மீது இந்த கோபம் ....?

செவ்வாய், 11 டிசம்பர் 2018 (15:53 IST)
தமிழ் சினிமாவில்  உள்ள  வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். தமிழகத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் தமிழர்களுக்காக முதல் குரல் கொடுப்பர்களில் மன்சூர் அலிகான்  முக்கியமானவர்.
'உன் காதல் இருந்தால் ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
 
இதில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் வழக்கம் போல தன் பாணியிலேயே பேசினார்:
 
'தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விடவும் அதிகமாக வைத்து விற்பனை செய்பவர்களை நானே நேரில் சென்று அடிப்பேன்; உதைப்பேன் . என் மக்களின் கோவணத்தை அவிழ்த்து டிக்கெட்டிற்கு பணம் வசூலிப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன்.  அதேபோன்று ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதற்காக ஆயிரக்கணக்கில் கொள்ளை அடிக்கும் கார்பரேட் நிறுவனத்தையும் எதிர்க்கிறேன். இவ்வாறு பேசினார்.
 
சினிமாவில் பல ரவுடிகளை புரட்டி எடுக்கும் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ஒளிந்து கொள்ளும் போது மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் மன்சூர் அலிகானின் பேச்சு சாதாரண மக்களுக்கான ஆறுதலாகவே இருக்கும் என்றாலும் பொது இடத்தில் அவர் நாகரிகமான வார்த்தைகளையே பேச வேண்டும் என பலரும் கருதுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்