சிரஞ்சீவி படத்தில் நடிக்கவில்லை

புதன், 27 ஏப்ரல் 2016 (17:27 IST)
சிரஞ்சீவியின் 150 -வது படம் குறித்து பல வருடங்களாக பேசி வருகின்றனர்.


 


எந்த கதையும் செட்டாகாமல், நல்ல கதை தருகிறவர்களுக்கு 1 கோடி பரிசு என்றுகூட அறிவித்தனர்.

கடைசியில் கத்தி கதைதான் அவர்களுக்கு செட்டாகியிருக்கிறது.
 
சிரஞ்சீவியின் 150 -வது படமாக கத்தி தெலுங்கு ரீமேக் தயாராகிறது.  அதில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதனை நயன்தாரா மறுத்துள்ளார். சிரஞ்சீவி படத்தில் நடிக்கக் கேட்டு என்னை யாரும் அணுகவில்லை என அவர் கூறியுள்ளார்.
 
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடும் வெயில் அடிப்பதால் கத்தி ரீமேக்கின் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்