சிரஞ்சீவி படத்திற்காக விடுமுறை அளிக்கும் அரபு நாடுகள்!

செவ்வாய், 10 ஜனவரி 2017 (14:43 IST)
சிரஞ்சீவி நடிப்பில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடித்து வெளியாகவிருக்கும் 'கைதி எண் 150' திரைப்படம் அரபு நாடுகளில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் மட்டும் 20 திரையரங்குகளிலும்,  சவுதியில் உள்ள ஒரு திரையரங்கிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது.

 
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த  எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அல் ரியாத் கட்டுமான நிறுவனம் மற்றும் மஸ்கட்டில் உள்ள 'எல்எல்சி'  வர்த்தக நிறுவனமும் சிரஞ்சீவி நடித்துள்ள 'கைதி எண் 150' பட வெளியீட்டை முன்னிட்டு விடுமுறை அறிவித்துள்ளது.
 
சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடித்த 'துருவா' திரைப்படம் ஓமனில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ராம் சரணின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கைதி எண் 150', தமிழில் இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிபிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்