இந்த நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் குறித்து அறிவிப்பேன் என்றும், ஜனவரி மாதம் காட்சியும் தொடங்குவேன் என்றும் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் மிகப்பெரிய சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் கதிகலங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்த அறிவிப்பு வெளிவந்தவுடன் பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் சேரன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: வரவேற்கிறோம் சார்.. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை... இது எனக்கு புடிச்சிருக்கு சார்.. மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம்.. நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் ஆட்களை பொறுத்தே அந்த நம்பிக்கை உருவாகும் சார்.. உங்களை வாழவைத்தவர்களுக்கான இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.