ஈழமக்களின் உயிரை விட ‘800’ பெரியதா? விஜய்சேதுபதிக்கு சேரன் கேள்வி

வியாழன், 15 அக்டோபர் 2020 (07:39 IST)
நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பலத்த எதிர்ப்புகள் மேலோங்கி வருகிறது
 
இந்த நிலையில் இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஈழ மக்களின் உயிரை விட முத்தையா முரளிதரன் படம் முக்கியமா? என கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:  உலகம் முழுவதுமிருந்து  தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது.
 
ஏற்கனவே இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதிக்கு அறிவுரை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விரைவில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க உள்ள சேரனும் அதே கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்