இந்த விவகாரத்தில் சர்கார் படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மீது காவல்நிலையத்தில் புகாரும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முன் ஜாமின் கோரி நவம்பர் 9 ஆம் தேதி மனுதாக்கல் செய்தார், முருகதாஸ். முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது. அரசு நலத்திட்டங்களை விமர்சித்தது எனது கருத்து சுதந்திரம். அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என ஏ.ஆர்.முருகதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முருகதாஸ் மீதான புகார் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தணிக்கை சான்றிதழ் பெற்ற படத்தை தவறு என்று எந்த நீதிமன்றத்தாலும் கூற முடியாது எனக் கூறி இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற டிசம்பர் 13( இன்று) ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டனர்.முருகதாஸை அதுவரைக் கைது செய்ய இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முருகதாஸ் தரப்பு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்குப் பதிலளித்த போலிஸ் தரப்பு இந்த வழக்கில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கேட்கப்பட்டது. இந்த கோரிக்கையை அடுத்து டிசம்பர்.20-ம் தேதி வரை முருகதாஸை கைது செய்ய தடை நீடிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.