இப்ப ஒரிஜினல் சந்திரமுகியே வந்துட்டா.. ‘சந்திரமுகி 2’ டிரைலர்..!

சனி, 23 செப்டம்பர் 2023 (17:17 IST)
17 வருஷத்துக்கு முன்பு எங்கள் வீட்டு பெண் கங்கா, சந்திரமுகியாக தன்னை நினைத்துக் கொண்டார் என்றும் இப்போது ஒரிஜினல் சந்திரமுகியே வந்துவிட்டார் என்று வடிவேலு கூறும் வசனத்துடன் கூடிய சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர்தான் தற்போது வெளியாகியுள்ளது.
 
கங்கனா ரனாவத்தின் ஆவேசமான சந்திரமுகி காட்சிகள், ராகவா லாரன்ஸின் ஆவேசமான வேட்டையன் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் உள்ளன. இந்த ட்ரைலரில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது உடனே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. 
 
எம்எம் கீரவாணியின் அசத்தலான பின்னணி இசை, பி. வாசுவின் அருமையான இயக்கம் ஆகியவை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. இந்த படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்