பெண்களுக்கான திரைப்படம்: தடை செய்த சென்சார் போர்ட்!!
சனி, 25 பிப்ரவரி 2017 (12:53 IST)
இயக்குநர் பிரகாஷ் ஜா தயாரிப்பில் உருவாகியுள்ள “லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா” திரைப்படம் சென்சார் போர்டால் தடைசெய்யப்பட்டுள்ளது.
மும்பை திரைப்பட விழாவில் லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா படம் பாலின சமத்துவத்திற்கான விருதை வாங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் சென்சார் போர்டின் கெடுபிடியில் சிக்கி இருப்பதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாலியல் சார்ந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதால் படத்திற்கு சான்று அளிக்க இயலாது என்று தணிக்கை குழு கூறியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த படத்தின் இயக்குநர், புர்கா பற்றி எடுத்ததால் தான் படத்தை வெளியிடவிடாமல் செய்கின்றனர். நான் ஒரு கலைஞன், படம் வெளியாகும் வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.