நட்சத்திர கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து தற்போது சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய ஊர்களில் நட்சத்திர பேட்மிண்டன் போட்டி விரைவில் நடைபெறவிருக்கிறது.
இதனை அடுத்து சென்னை அணி சார்பில் விளையாடும் வீரர்களின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த அணியில் நடிகர் ஆர்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் நடிகைகள் கலந்து கொள்கின்றனர். பரத், பிரசன்னா, அபிநய் வட்டி, அமிதாஷ், முன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா, ரூபா மஞ்சரி ஆகியோரும் விளையாடுகிறார்கள்.