திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர்களே... ஜோக்கர் சொல்வதை கேளுங்க

புதன், 17 ஆகஸ்ட் 2016 (13:00 IST)
ராஜு முருகன் இயக்கியிருக்கும் ஜோக்கர் அரசியல் நையாண்டி படமாக வெளிவந்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் 5 வது இடத்தைப் பிடித்துள்ள இப்படம், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


 


இந்நிலையில் திருட்டு விசிடி மற்றும் இணையத்தில் படத்தை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு ஜோக்கர் படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
வேறு ஒன்றுமில்லை. திருட்டு விசிடி மற்றும் இணைய தரவிறக்கத்தில் ஜோக்கர் படத்தைப் பார்த்தால், அதற்குரிய பணத்தை எங்கள் வங்கிக் கணக்கில் போடுங்கள் என்று ஜோக்கர் தயாரிப்பு நிறுவனத்தின் வங்கிக் கணக்கை தந்துள்ளனர். அப்படி வங்கியில் போடப்படும் பணம் கழிப்பறை கட்ட பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ராஜு முருகனின் ஜோக்கர் ரொம்ப நல்லவனா இருப்பான் போலிருக்கே.

வெப்துனியாவைப் படிக்கவும்