நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்கள் செய்த வேலையால் சிக்கலில் சிக்கிய விஜய்!!
வெள்ளி, 12 மே 2017 (10:56 IST)
நடிகர் விஜய் இந்து மதத்தை புண்படுத்தியதாக கூறி அவர் மீது சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவரது ரசிகர்கள் செய்த ஒரு வேலை.
அட்லி இயக்கத்தில் விஜய் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை தொடர்ப்பு படுத்தி விஜய் கையில் சூலாயுதம் வைத்து இருப்பது போல ரசிகர்கள் ஒரு போஸ்டர் உருவாக்கி வைரலாக்கியுள்ளனர்.
இந்த போஸ்டர் தான் விஜய் தற்போது தலைவலி கொடுத்துள்ளது. இந்து முன்னணி கட்சி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விஜய் கையில் சூலாயுதத்தை வைத்துக்கொண்டு நடனம் ஆடுவது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என கூறி விஜய் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.