வெளியானது தனுஷின் கேப்டன் மில்லர் டீசர்.. எப்படி இருக்கு?

வெள்ளி, 28 ஜூலை 2023 (07:14 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தென்காசி அருகே நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 15 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசர் எப்படி இருக்கு?

கேஜிஎஃப் போல எங்கு திரும்பினாலும் துப்பாக்கிகள் வெடித்து தோட்டாக்கள் சிதறும் காட்சிகளோடு உருவாகியுள்ளது டீசர். தேடப்படும் குற்றவாளியான மில்லர் தனுஷ் ராட்சத துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார். தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது போல திரை முழுவதும் துப்பாக்கி சத்தம்தான் கேட்கிறது. ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது இந்த டீசர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்