இப்படி செய்யலாமா விளம்பரம்?- நடிகர் சித்தார்த் கொந்தளிப்பு

வியாழன், 24 நவம்பர் 2016 (13:21 IST)
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள விளம்பர போஸ்டரை பார்த்த நடிகர் சித்தார்த் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளார். 


 
ஜாக் அன்ட் ஜோன்ஸ் என்ற சர்வதேச ஆண்கள் ஆடை விற்பனை பிராண்டின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். அவரது விளம்பர பேனர்கள், முக்கிய நகரங்களின் வீதியில் வைக்கப்பட்டுள்ளன. 
 
அதில் வேலையை நிறுத்தாதீர்கள்; வேலையை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி ரன்வீர் ஒரு பெண்ணை தனது தோளில் தூக்கிச் செல்வது போன்று உள்ளது அந்த விளம்பரம். இதை பார்த்த சித்தார்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் பணியிடங்களில் பெண்களின் உரிமை தரம் தாழ்ந்துள்ளது. அவர்கள் என்ன நினைத்தார்கள்? என பொங்கியுள்ளார். 
 
மனதில் பட்டதை சொன்ன நடிகர் அல்ல மனிதர்... 

வெப்துனியாவைப் படிக்கவும்