தமிழின் முதல் முழு நீள ஸ்பூப் படமாக உருவான தமிழ்ப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன் ஒரு கொலை த்ரில்லர் படத்தை உருவாக்க உள்ளாராம். அதில் அவரின் கல்லூரி கால நண்பரான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.