இந்தியாவில் பிறந்ததே அவமானம்: இயக்குநர் அமீர் கருத்து

புதன், 18 ஜனவரி 2017 (11:18 IST)
திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்து வருகின்ற நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை அலங்காநல்லூரில் இளைஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.


இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் அமீர், இளைஞர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு, பீட்டா அமைப்பை  கண்டித்தும், ஜல்லிக்கட்டை தடை செய்த மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார். 
 
அதில் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் சான்றாக நடக்கும் ஜல்லிக்கட்டை தடை செய்வது கண்டிக்கத்தக்கது.  தமிழரின் பாரம்பரியத்தை தடை செய்ய நினைக்கும் பீட்டாவை தடை செய்ய வேண்டும். காலம் காலமாக தமிழர்கள் நடத்தி  வரும் விளையாட்டு இது என கூறிருந்தார்.
 
இந்நிலையில் இயக்குநர் அமீர் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு கொண்டு பேசினார். அப்போது அவர், ஜல்லிக்கட்டு  விவகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசையின் கருத்துக்கள் பொதுமக்களை  அச்சுறுத்துவதாக உள்ளது.
 
இதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் அமீர் ஸ்பெயின் நாட்டு பாரம்பரிய விளையாட்டான புல் ஃபைட்டை பீட்டா அமைப்பு  தடுத்து நிறுத்த முயன்றபோது, அது எங்களின் கலாச்சாரம் என்று பீட்டா அமைப்பை தடுத்து நிறுத்தியது. ஆனால் இந்தியா, ஒரு  அந்நிய நிறுவனத்துக்கு பயப்பட வேண்டி இருப்பதால் இந்த நாட்டில் பிறந்ததை நான் அவமானமாக கருதுகிறேன் என்று  கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்