பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியதாக பிரபல நடிகை தகவல்

திங்கள், 10 ஜனவரி 2022 (15:35 IST)
பிரபல நடிகையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைமைப் பேச்சாளருமான ஸ்ரீபிரியா இன்று பூஸ்டர் தடுப்பூ செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவில் மூன்றாவது அலை கொரொனா வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கள் எடுத்து வருகிறது. ஏற்கனவே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரொனா தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில்,  தற்போது 18 வயதிற்குள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நடந்து வருகிறது. அத்துடன் 2 வகையான தடுப்பூசி போட்டவர்கள் கூடுதல் பாதுகாப்பாக பூஸ்டர் தடுப்பூசி போடலாம் எனத் தெரிவித்துள்ளது.

 இந்நிலையில் நடிகையும் இயக்கு நருமான ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் – மீனா நடிப்பில் த்ரிஷ்யம் பட ரீமேக் பட பணிகள்  நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Booster taken today!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்