பாகுபலி, தேவி ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடம் பாராட்டை பெற்றார் தமன்னா. தெலுங்கு சினிமாவில் கவணம் செலுத்தி வந்த தமன்னாவுக்கு பாகுபலி மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஏஏஏ படம் தோல்வி அடைந்ததால் தற்போது மீண்டும் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
இந்நிலையில் இவர், கொலையுதிர்காலம் ஹிந்தி பதிப்பான காமோஷி படத்தில் நடித்துள்ளார். இதில் தமன்னா முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். படக்குழுவினர் தமன்னாவின் நடிப்பை பாராட்டி புகழ் பாடி வருகின்றனர். இதேபோல் தெலுங்கி படம் ஒன்றிலும் தமன்னா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.