முன்னாள் ராணுவ வீரர்.. இந்நாள் நடிகர்; கொரோனாவால் மரணம்! – சோகத்தில் பாலிவுட்!

சனி, 1 மே 2021 (10:44 IST)
பாலிவுட்டின் பிரபல குணசித்திர சினிமா மற்றும் டிவி நடிகரான பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பெரிய திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல் தொடர்களிலும் நடித்து வந்தவர் பிக்ரம்ஜித் கன்வர்பால். முன்னாள் இந்திய ராணுவ வீரராக பணிபுரிந்த இவர் 2002ல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அதன்பிறகு தொடர்ந்து பிரபலமான படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்ரம்ஜித் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்