விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் பாபி சிம்ஹா

திங்கள், 12 ஜூன் 2017 (16:10 IST)
விக்ரம் போலீஸாக நடிக்கும் படத்தில், வில்லனாக நடிக்கிறார் பாபி சிம்ஹா.


 


கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்குப் பிறகு, ஹரி இயக்கும் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் விக்ரம்.

விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிக்கின்றனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில், விக்ரமுக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே, ‘இறைவி’, ‘ஜிகர்தண்டா’’, ‘மெட்ரோ’ படங்களில் வில்லனாக நடித்தவர் பாபி சிம்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்