உனக்காக வாழ நினைக்கிறேன் ...! பிகில் படத்தின் அழகான மெலோடி பாடல்!

புதன், 18 செப்டம்பர் 2019 (16:37 IST)
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 


 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அண்மையில் இப்படத்தில் இடப்பெறும் "சிங்கப்பெண்ணே" மற்றும் வெறித்தனம் என்ற இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளதால்  இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் சற்றுமுன் பிகில் படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக் " உனக்காக வாழ நினைக்கிறேன் ... உசுரோட வாசம் பிடிக்கிறேன். என்று தொடங்கும் ரொமான்டிக் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்