பிக்பாஸ் 2: ஐஸ்வர்யாவுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஹாரிக்

புதன், 20 ஜூன் 2018 (07:59 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முதல் லக்சரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவருக்கும் ஒரு கவர் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும், அந்த கவரில் உள்ள கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. நேர்மையான பதில் இல்லை என்று போட்டியாளர்கள் கருதினால், தலைவர் ஜனனி மீண்டும் அந்த நபரை பதில் சொல்ல வைக்க வேண்டும் என்பதும் இதன் விதியாகும்
 
இந்த டாஸ்க்கில் முதன்முதலில் கவரை எடுக்க வந்தவர் ஹாரிக். இவருக்கு கேட்கப்பட்ட கேள்வி, யாருடன் டேட்டிங் செய்ய விரும்புகிறீர்கள் என்பதுதான். இதற்கு ஹாரிக், 'ஐஸ்வர்யாவுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக பதிலளித்தார். ஏனெனில் அவர் மொசமொசன்னு இருப்பதாக தெரிவித்ததும் மற்ற போட்டியாளர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
 
ஐஸ்வர்யா பார்க்க அழகாக இருப்பதாகவும், இந்த வீட்டில் இங்குமங்கும் அவர் ஓடியாடி வருவது வீட்டிற்கே அழகை தருவதாகவும் அவர் தெரிவித்தார். ஹாரிக்கின் இந்த கருத்துக்கு ஐஸ்வர்யா நன்றி தெரிவித்து கொண்டார். 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் நாயகியாக இவருக்கும் ஹாரிக்கும் காதல் மலருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்