இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் அதிகம் உள்ளதாக உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி பொதுமக்களும் பல இடங்களில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு அவரது உருவ பொம்மையை எதிர்த்து சிலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் குறித்து பேசிய மத்திய ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஆய்வறிக்கை வழங்குமாறு ஒளிபரப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆய்வறிக்கை சமர்பித்த பிறகு பிக்பாஸ் தடை செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.