இந்நிலையில், அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா என்பவர் தலைமையில் ஒரு அணியும், ஸ்ரீதேனாண்டால் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிடவுள்ளன.
இந்நிலையில் தற்போது உள்ள சங்கத்தில் படம் தயாரிப்பவர்கள் சுமார் 200 பேர் உள்ளதாகவும் அவர்கள் படத்தயாரிப்பு தொழிலில் ஒருந்து விலகியுள்ள நிலையில் அவர்களுக்காகவே புதிய சங்கம் ஒன்றை உருவாகவுள்ளனர்.இதில் இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும் டி. சிவா செயலாளராகவும் பொறுப்பேற்கவுள்ளதாகவும் இச்சங்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.