பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு; பார்த்திபன்

ஞாயிறு, 4 ஜூன் 2017 (18:23 IST)
பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு. அவர் நல்ல மனிதரே தவிற நல்ல நடிகர் இல்லை என்று பார்த்திபன் வித்தியாசமாக பாராட்டியுள்ளார்.


 

 
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் பாரதிராஜா நடித்துள்ள குரங்கு பொம்மை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பார்த்திபன் பாரதிராஜாவை வழக்கம் போல் வித்தியாசமான முறையில் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. அவர் ஒரு சிறந்த குரங்கு. குரங்கு என்றால் ஒரு வார்த்தை, ஆனால் நான்கு எழுத்து உள்ளது. அவர் சிறந்த ‘கு’ணவான், சிறந்த ‘ர’சனையாளர், இ‘ங்’கிதம் அறிந்தவர், ‘கு’வாலிட்டியான மனிதர்.
 
எனக்கு தெரிந்து பாரதிராஜா ஒரு நல்ல மனிதரே தவிற நல்ல நடிகர் இல்லை. இந்த படத்தில் நான்கு, ஐந்து காட்சிகள் பார்த்தேன். அவர் நடிக்கவே இல்லை, அவ்வளவு சிறப்பாக வாழ்ந்திருக்கிறார், என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்