ரஜினியைத் தாக்கிய பாரதிராஜா?

செவ்வாய், 23 மே 2017 (10:29 IST)
நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், பாரதிராஜா ரஜினியைத் தாக்கிப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், வரக்கூடாது என்ற சர்ச்சை, பல காலமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் 5 நாட்கள்  ரசிகர்களை ரஜினி சந்தித்ததை முன்னிட்டு, இந்த சர்ச்சை மிகப்பெரும் விவாதமாக மாறத் தொடங்கிவிட்டது. அமைச்சர்கள் முதல் ஆன்லைனில் இருப்பவர்கள் வரை எல்லோரும் இதைப்பற்றி தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நேற்று நடந்த இயக்குநர் பேரரசின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, “தமிழ் சினிமாவையும், கலாச்சாரத்தையும் மெல்ல மெல்ல அழிக்கும் முயற்சிதான் ஜி.எஸ்.டி. மசோதா. வேறு எங்கும் சென்று தமிழன்  தொழில் செய்ய முடியாது. ஆனால், மற்றவர்கள் இங்கு வந்து தொழில் செய்யலாம். அதேபோல், தமிழன் வேறு எங்கும் சென்று அரசியல் செய்ய முடியாது. ஆனால், யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் வந்து அரசியல் செய்யலாம்” என்று பேசினார்.  அவர், ரஜினியைத்தான் தாக்கிப் பேசினார் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்