இதையடுத்து இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சசிகலாவை பலரும் சென்று சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் சீமான், பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோர் அவரது இல்லத்தில் சென்று சந்தித்தனர். பின்னர் பேசிய பாரதிராஜா ஒரு சாதனை தமிழச்சியைப் பார்க்கனும்னு ஆசைப்பட்டேன், சாதனை லேடி, வீரத்தமிழச்சியான சசிகலா அவர்களை சந்தித்து பேச நினைத்தேன். வந்தேன். தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பத்தான் அவர் வந்துள்ளார். எனக் கூறியுள்ளார்.