பரத்& வாணி போஜன் நடிக்கும் லவ் படத்தின் டிரைலர் ரிலீஸ்!

வெள்ளி, 14 ஜூலை 2023 (16:32 IST)
நடிகர் பரத் நடித்த ஐம்பதாவது திரைப்படத்திற்கு லவ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள கடந்த ஆண்டே முதல் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன் நடிக்க, மற்ற முக்கிய வேடங்களில் கேஎஸ் ரவிக்குமார் மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஜூலை 28 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. அதையொட்டி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் கொலை திரில்லராக உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்