சண்டை காட்சியை வெளியிட்டவர் சைபர் கிரைம் போலீசாரால் கைது

புதன், 23 நவம்பர் 2016 (13:30 IST)
பாகுபலி 2' படத்தின் 9 நிமிட காட்சிகளை இணையத்தில் வெளியிட்டதாக கிராபிக் டிசைனர் கைது செய்யப்பட்டுள்ளார். 


 
 
ராஜமெளலி இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் 'பாகுபலி 2' படத்தில் சில சண்டைக்காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது. 
 
பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த பாகுபலி பெரும் வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து, மிக பிரமாண்டமான முறையில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கின்றார். தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் யாரும் எதிராபாரத விதமாக, 'பாகுபலி 2' படத்தின் 9 நிமிட சண்டைக் காட்சிகளில் ஒரு பகுதி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இதில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் சில எதிரி நாட்டு போர் வீரர்களுடன் வாக்குவாதம் செய்வது போலவும், அதனைத் தொடர்ந்து சண்டைத் தொடங்குவது போன்று அக்காட்சிகள் அமைந்திருக்கின்றன. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 


 
 
இதனை தொடர்ந்து படக்குழுவினர் நடத்திய விசாரணையில்,கிராபிக்ஸ் கோர்வைக்காக ஹைதராபாத்தில் உள்ள அன்னப்பூர்னா ஸ்டியோவில் கொடுக்கப்பட்ட 9 நிமிட காட்சிகளில்,5 நிமிட காட்சிகள்தான் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது என்பதை கண்டறிந்தனர்.இதனை தொடர்ந்து அன்னப்பூர்னா ஸ்டியோவுக்கு சென்ற படக்குழுவினர்,அந்த காட்சிகளை வெளியிட்டது பயிற்சி கிராபிக் டிசைனராக பணிபுரியும் கிருஷ்ண தயானந்த் என்பவர்தான் என்பதையும் கண்டறிந்தனர். 
 
இது தொடர்பாக தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் கிருஷ்ண தயானந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்