கமலுடன் மீண்டும் இணையும் பகத் பாசில்...! ரசிகர்கள் குஷி!

செவ்வாய், 19 ஜூலை 2022 (20:55 IST)
விக்ரம் படக்குழுவினர் மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், கமல், விஜய்சேதுபதி,  பகத்பாசில், சூர்யா நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ள படம் விக்ரம்.

இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள  நிலையில், கமல்ஹாசன் அடுத்து, இந்தியன்-2 படத்தில், நடிக்கவுள்ளார்.

இப்படத்தை முடித்த பின், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். இப்படத்தில் கமலுடன் இணைந்து பகத்பாசில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்தையும் ராஜ்கமல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்