காஞ்சுரிங்-க்கு முன்பு உருவான இருண்ட சாம்ராஜ்யத்தின் தமிழ் டிரெய்லர்

செவ்வாய், 10 ஜூலை 2018 (18:12 IST)
காஞ்சுரிங்-க்கு முன்பு அனெபெல்லா-க்கு முன்பு உருவான இருண்ட சாம்ராஜ்யம் குறித்த கதை தி நன் என்ற பெயரில் திரைப்படமாக வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 
பேய் படங்கள் என்றாலே அதில் ஹாலிவுட் திரைப்படங்கள்தான் பெஸ்ட். பார்பவர்கள் மிரட்டும் வகையில் பேய் திரைப்படங்கள் ஹாலிவுட் துறையில்தான் பெரும்பாலும் உருவாக்கப்படுகிறது.
 
அந்த வகையில் 2013ஆம் ஆண்டு வெளியான காஞ்சுரிங் என்ற திரைப்படம் உலகம் முழுவது நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில் திரைப்படம் வெளியான பின்னரே ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் திரையரங்கிலே நல்ல வரவேற்பை பெற்றது.
 
காஞ்சுரிங் இரண்டாவது வரும் பேய் எப்படி உருவானது என்பது குறித்த கதை தி நன் என்ற பெயரில் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியானது.
 
இந்நிலையில் தி நன் திரைப்படத்தின் டிரெய்லர் தமிழில் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 6ஆம் தேதி இந்த டிரெய்லரை வார்னர் பிராஸ் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்