ஹீரோவானார் கண்ணதாசனின் பேரன்

வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (17:40 IST)
பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான கண்ணதாசன் பேரன் முத்தையா கண்ணதாசன், ஹீரோவாக தமிழ் சினிமாவில்  அறிமுகமாகிறார்.

 
 
‘நேர் எதிர்’ படத்தை இயக்கிய ஜெயபிரதீப், சிறு இடைவெளிக்குப் பிறகு இயக்கும் இந்தப் படத்துக்கு, ‘வானரப்படை’ என்று  தலைப்பு வைத்துள்ளனர். விளம்பரப் படங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் அவந்திகா, முத்தையாவுக்கு மகளாக நடித்துள்ளார். அப்பா – மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. 
 
“பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையே சிறிய பிரச்னை தலைதூக்கும்போதே, அதைக் களைந்துவிட வேண்டும்.  இல்லையென்றால், அது மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து நிற்கும். இந்தப் படம், அப்படிப்பட்ட தலைமுறை இடைவெளியைப்  பற்றிப் பேசுகிறது” என்கிறார் இயக்குநர்.

வெப்துனியாவைப் படிக்கவும்