உங்க கடைசி பொண்ணு என்ன பண்ணுறா தெரியுமா? – பயில்வானை வெச்சு செய்த ஷகீலா! – வைரலாகும் வீடியோ!

Prasanth Karthick

திங்கள், 6 மே 2024 (12:02 IST)
தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பயில்வான் ரங்கநாதனும், நடிகை ஷகீலாவுக்கும் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



தமிழ் சினிமாவில் 80கள் முதலாக பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். சினிமா பத்திரிகையாளராகவும் உள்ள பயில்வான் கடந்த பல காலமாகவே பல யூட்யூப் சேனல்களில் பல நடிகைகள் குறித்த கிசுகிசுக்களை பேசுவதும், அதனால் பல சர்ச்சைகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் விஷால் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சென்றபோது கூட பயில்வான் ஏதோ கேள்வி கேட்டபோது, உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என விஷால் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகை குயிலி நடத்தும் நிகழ்ச்சியில் நடிகை ஷகீலாவும், பயில்வான் ரங்கநாதனும் கலந்து கொண்டனர். அதில் சினிமாவில் நடிக்கும் பெண்களை பயில்வான் தரகுறைவாக பேசுவதை ஷகீலா கண்டித்தார். அப்போது தனக்கு தெரிந்த தகவல்களைதான் தான் பேசுவதாக பயில்வான் பேசினார்.

ALSO READ: தக் லைஃப் பட ஷூட்டிங்கில் இளமையான தோற்றத்தில் கமல் & சிம்பு… வைரலாகும் போட்டோ!

அதற்கு ஷகீலா “உங்க கடைசி பொண்ணு என்ன பண்ணுறா தெரியுமா? யாரை லவ் பண்றா தெரியுமா?” என பேச, கோபமடைந்த பயில்வான் “என் பொண்ணை பத்தி ஆதாரம் இல்லாம தப்பா பேசாதீங்க” என்றார். அதற்கு ஷகீலா “இதே போலதானே சினிமா துறையில் உள்ள பெண்களின் பெற்றோருக்கும் நீங்கள் பேசும்போது கோபம் வரும். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு திரும்ப வரும். கர்மா இஸ் பூமராங்” என கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ள நிலையில் பலரும் ஷகீலா பயில்வானை கண்டித்தது குறித்து ‘கர்மா இஸ் பூமராங்’ என சொல்லி பதிவிட்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K

Karma is a Boomerang!! Daa Bayilvan.. pic.twitter.com/cQBkqRLbOw

— Single Singam ???????? (@Nikhil195Nikhil) May 5, 2024

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்