உண்மையாகவே திருமணம் ஆகிவிட்டதா? பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட புதிய வீடியோ..!

Siva

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (09:35 IST)
நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் நேற்று திருமண புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்பதும் அதில் மணமகள் முகம் இல்லாததால் அந்த திருமணம் குறித்த கேள்வி எழுந்தது என்பதையும் பார்த்தோம்.

மேலும் நேற்று ஏப்ரல் ஒன்றாம் தேதி என்பதால் முட்டாள் தின பதிவாக இருக்கலாம் என்றும் அல்லது அவர் நடித்து வரும் படத்தின் ஒரு காட்சியாக இந்த புகைப்படம் இருக்கலாம் என்றும் கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கையில் தாலியை வைத்துக்கொண்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்டுவதற்கு தயாராக இருக்கும் காட்சியும் மணமகள் புன்சிரிப்புடன் இருக்கும் காட்சியும் உள்ளது.

இதை பார்த்து அவருக்கு உண்மையாகவே திருமணம் ஆகி விட்டதா என்று நினைத்த நேரத்தில் தான் இந்த பதிவின் கேப்ஷனில் இது ஒரு விளம்பர படத்திற்கான படப்பிடிப்பு என்றும் ஏப்ரல் ஒன்று என்றும் பாலாஜி முருகதாஸ் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து இது உண்மையான திருமணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகைகள் நிம்மதி அடைகிறார்களோ இல்லையோ ஷிவானி நாராயணன் நிம்மதியாய் இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்