ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் சுவராசியமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் தினத்தில் யாரை நீங்கள் அண்ணனாக ஏற்றுக்கொண்டு ராக்கி கட்டுனீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஷிவானி, ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
அந்த புகைப்படத்தில் அவர் பாலாஜி முருகதாசுக்கு ராக்கி கயிறு கட்டுவது போன்ற காட்சி உள்ளது. இதனை அடுத்து பாலாஜியை அவர் அண்ணனாக ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சி குலாவி விட்டு இப்போது அண்ணன் தங்கையா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்