பைரவா 100 கோடியை கடந்தது.... தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செவ்வாய், 17 ஜனவரி 2017 (13:36 IST)
விஜய்யின் பைரவா 4 நாள்களில் 100 கோடியை கடந்ததாக படத்தை தயாரித்திருக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.



பரதன் இயக்கிய இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள். ரசிகர்கூட்டம் அதையெல்லாம் கேட்கவாப் போகிறது. விடுமுறை நாள் என்பதால் பைரவா திரையிட்ட நாள் முதல் திரையரங்குகளில் திருவிழா கூட்டம். எக்கச்சக்க வசூல். தெறியை முந்தியிருக்கிறது என்றால் பாருங்கள்.

திரையிட்ட நான்கு நாட்களில் 100 கோடி வசூலை தாண்டிய வெற்றி படம் - பைரவா என்று விஜயா புரொடக்ஷன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு இது, ஸ்வீட் எடு கொண்டாடு நேரம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்